இராஜபாளையத்தில் இரண்டாவது ஞாயிறு முழு ஊரடங்கு… மருந்துக்கடைகள் (மெடிக்கல்) உட்பட அனைத்து கடைகளும் அடைப்பு..

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிறும் தளர்வற்ற முழு ஊரடங்கு என தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் மற்றும் கிராமப்பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது .அதில் இன்று மருந்துக்கடைகள் (மெடிக்கல்) சங்கத்தின் சார்பில் இன்று (12/07/2020) அனைத்து  மருந்துக்கடைகளையும்
அடைக்க முடிவு எடுக்கப்பட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கின் பொழுது மருந்து வாங்க செல்வதாகக் கூறி சிலர் வெளியே சுற்றி வருவதால் இந்த ஞாயிற்றுக்கிழமை மருந்து கடை அடைப்பதற்காக அனைத்து வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு கடைகள் அனைத்தும் அடைத்துள்ளனர்.

ஆனால் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டு தான் இருக்கிறது இப்படி செல்கின்றவர்களையும் காவல்துறை கட்டுப்படுத்த முன்வரவேண்டும், என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image