மண்டபம் பேரூராட்சி தூய்மை காவலர்கள், கணவரை இழந்த பெண்களுக்கு அதிமுக நிவாரணம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்ட முகாம் அண்ணா கடை வீதி என்.வேல்முருகன். வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் தனது சொந்த செலவில் மண்டபம் முகாம் சிங்காரத்தோப்பு, அண்ணா குடியிருப்பு, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரானா பேரிடர் கால ஆறாம் கட்ட நிவாரண பொருட்களை அதிமுக மாவட்ட செயலர் எம்.ஏ.முனியசாமி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் அறிவுறுத்தல் படி 03.11.2020 ஆம் தேதி வழங்கினார். இதனையடுத்து கொரானா தடுப்பு நடவடிக்கை துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்படிமண்டபம் பேரூராட்சி தூய்மை காவலர்கள் 70 பேர், மண்டபம் முகாமில் கணவரை இழந்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு என்.வேல்முருகன் ஏற்பாட்டில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்பை அதிமுக., நகர் செயலரும், மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவருமான கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர் வழங்கி தொடங்கி வைத்தார். தலைமை கழக பேச்சாளர் மா.மைதீன் (மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்),மண்டபம் பாரம்பரிய மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர்களும், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்களுமான எம்.நம்புவேல், எல்.சீனி காதர் முகைதீன்,மேலமைப்பு பிரதிநிதி எச். சதக்கத்துல்லா (வடக்கு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர்), அம்மா பேரவை நகர் இணை செயலர் கே.பூபதி ரஜினி காந்த் (பனைவெல்லம் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சம்மேளன முன்னாள் உறுப்பினர்), ஜெயலலிதா பேரவை உறுப்பினர்கள் எஸ்.லோகநாதன், பி.அண்ணா துரை, கே.காளிதாஸ், பி.மணிக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image