நிலக்கோட்டையில் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே தனியார் அறக்கட்டளை மகளிர் சுய உதவி களை மேம்படுத்தக்கூடிய நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இதன் மூலம். மகளிர் சுய உதவிக்குழுவினர்  களாக நிலக்கோட்டை , விளாம்பட்டி, முத்துலிங்காபுரம், சின்னாளபட்டி, தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மகளிர் குழுவினரிடம் நிதி உதவி பெற்றுஅதன் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 2 கோடி வரை சுழற்சி முறையிலான கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது..

இன்நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாதம் தோறும் ஒரு தொகையை சேமிப்பாக அறக்கட்டளை நிர்வாகிகளிடம் செலுத்தி வந்துள்ளதாகவும் இந்நிலையில் திடீரென அறக்கட்டளை  நிர்வாகிகளில் ஒருவர் மாயமானதால் பணம் கட்டியவர்கள் ஆத்திரமடைந்து 10/07/20 நேற்று அறக்கட்டளை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனை அறிந்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன், உதவி ஆய்வாளர் கண்ணா காந்தி ஆகியோர்கள் கொண்ட காவலர்கள் விரைந்து சென்று அலுவலக முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து பேசி சமரசம் செய்ததோடு அறக்கட்டளை நிர்வாகத்தினரிடம் பேசி பணத்தை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image