காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி-சுரண்டை அருகே இரண்டு காவல் நிலையங்கள் மூடல்..

சுரண்டை அருகே உள்ள இரண்டு காவல் நிலையங்களில் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையங்கள் மூடப்பட்டன.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் மற்றும் சாம்பவர் வடகரை காவல் நிலையங்களில் பணியாற்றும் தலா ஒரு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று காலை இரண்டு காவல் நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காவல் நிலையம் தற்காலிகமாக மாற்று இடத்தில் இயங்கி வருகிறது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image