கள்ளப்பட்டி ஏழாவது நாடான வாட்ஸ்அப் சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வேப்பனுத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட கள்ளப்பட்டியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இளைஞார்கள்,வெளியூர்களில் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களில் மரம் நட வேண்டும் என பல நாள் நினைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது,

இதற்காக கள்ளப்பட்டி ஏழாவது நாடான வாட்ஸ்அப் சங்கம், எனும் ஒரு வாட்ஸ்அப் குரூப் அறிமுகம் செய்து அதில் உற்றார், உறவினர், என வெளி ஊரில் இருக்கும் சொந்தபந்தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த ஊருக்கு எங்களால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டுமென நோக்கத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முத்தையன்பட்டி மலையிலுள்ள மலை ராமன் கோவில் முதல் கள்ளப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி வரை மரம் நட வேண்டும் என முடிவு செய்தனர் ,இதனை அடுத்து வாட்ஸ்அப்பில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தங்களால் முடிந்த பண உதவி செய்து சுமார் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு உகந்த மரமான அரசமரம், வேப்பமரம்,நாவல் மரம், பூவரச மரம் ,புளியமரம், இலுப்பை மரம், என சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கள்ளப்பட்டி ஏழாவது நாடான வாட்ஸ்அப் சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..