ஆட்சியர் மீது முகநூலில் அவதூறு பரப்பியதாக திமுகவினர் மீது வழக்கு பதிவு. ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மீது மூலிகை பவுடர் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக முகநூலில் பதிவிட்டதாக, திமுக சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், கார்த்தி மற்றும் ராஜ்குமார் என 4 பேர் மீது திருப்புவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சேங்கைமாறன் மற்றும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் வழக்கு சம்பந்தமாக எஞ்சிய திமுக திருப்புவனம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி ஏராளமான திமுகவினர் திருப்புவனம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தேவதாஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் திருப்புவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..