சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாயில் குடியேறும் போராட்டம்-விவசாயிகள் சங்கம்,அரசியல் கட்சிகள் திரளாக பங்கேற்பு…

சேரன்மகாதேவியில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கால்வாயில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவின் பிரதான கால்வாய் கன்னடியன் கால்வாய் ஆகும். இதன் மூலம் கல்லிடைகுறிச்சி முதல் கோபாலசமுத்திரம் வரை சுமார் 13,000 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன. இங்கு ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இன்று வரை கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்காத தமிழக அரசை கண்டித்தும், அரசு அதிகாரிகளை கண்டித்தும் கால்வாயில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

இதில் அணையிலிருந்து கன்னடியன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் கோஷமிட்டனர். சேரன்மகாதேவி ஏ எஸ் பி பிரதீப், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மாரியப்பன், ஜெயகணேஷ், சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் ராஜாராம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு வார காலத்திற்குள் தண்ணீர் திறக்க ஆவண செய்கிறோம் என அதிகாரிகள் உத்திரவாதம் அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்க தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்ப நயினார், பொருளாளர் ரத்தினம் திமுக ஒன்றிய செயலாளர் முத்து பாண்டி என்ற பிரபு, நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஐயப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வகுமார், காங்கிரஸ் முருகன் ரவிச்சந்தர், அதிமுக மாரிச்செல்வம், மதிமுக குட்டி பாண்டியன், மக்கள் நீதி மையம் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய செயலாளர் கபூர்.அம்பை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்.கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன்.கல்லிடை நகர செயலாளர் ராமசாமி. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாதவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கமால் பாட்சா மற்றும் கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image