Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தகவல் தொழில்நுட்பத்தின் வசதி வாய்ப்புகள் நம்மிடம் இல்லை… அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு…

தகவல் தொழில்நுட்பத்தின் வசதி வாய்ப்புகள் நம்மிடம் இல்லை… அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு…

by ஆசிரியர்

தகவல் தொழில்நுட்பத்தின் வசதி வாய்ப்புகள் நம்மிடம் இல்லை – தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது நமக்கு சவாலாக உள்ளது – அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு.

CII சார்பாக கனெக்ட் என்ற தலைப்பில் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது இதில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்து கொண்டார்.

மேலும் இந்த கருத்தரங்கில் தியாகராஜ் மில்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியா, எல்காட் மேனேஜிங் டைரக்டர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ராஜா வருமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத் துறை குறித்த கருத்தரங்கில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்துறை தொடங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது.

இ-சேவை மையம் மற்றும் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் e-Pass அனைத்து நடவடிக்கைகளும் TNeGA தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக சிறப்பாக நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும்போது_

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்மீகம் கல்வி வணிகம் வியாபாரம் அனைத்தும் இணையதளம் மூலமாக நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கும் குறைந்த செலவில் இணையதள வசதி செய்து கொடுப்பதற்கான தமிழ் நெட் திட்டம் தொடங்கப்பட்டது.

பல்வேறு தடைகளைத் தாண்டி பாரத் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரத்துக்காக ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்த திட்டம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்.

அதிவிரைவு இணையதள சேவை ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்றடைந்தால் மருத்துவம் கல்வி என அனைத்தும் வளர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருக்கும்.

மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் நடத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

முதல் ஊரடங்கி லிருந்து விவசாயம் தடை இல்லாமல் எவ்வாறு செயல்பட்டு வருகிறது அதே போல் தகவல் தொழில்நுட்பமும் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வசதியும் வாய்ப்பும் நம்மிடம் இல்லை.

எனவே அதனை எவ்வாறு சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பது நம்முடைய சவாலாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தகவல்தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது எனவே இந்திய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு சார்பாக நடைபெற்று வரும் கனெக்ட் என்ற இந்த கருத்தரங்கில் மூலமாக புதிய முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தகவல் தொழில்நுட்பம் துறை முன்னேற்றம் ஆகிய விவாதங்கள் அனைத்தும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தீர்வு காணப்படும் என அமைச்சர் கருத்தரங்கில் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!