சுரண்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை-நாளை முதல் 3 நாட்கள் முழு அடைப்பு…

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுரண்டையில் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ‌‌‌‌‌‌வகையில் வரும் 11ம் தேதி சனி, 12ம் தேதி ஞாயிறு, 13ம் தேதி திங்கள் ஆகிய 3 நாட்களும் முழு கடையடைப்பு நடைபெறுகிறது.வருகின்ற 14-ம் தேதி செவ்வாய் முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் ( பார்சல் மட்டுமே வழங்கப்படும்) என சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் வணிக வளாகம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகிய சங்கங்களின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து இதற்கான வழிகாட்டுதல் கூட்டம் சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் வீகேபுதூர் தாசில்தார் (பொ) மகாலட்சுமி தலைமையில் நடந்தது சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி அரசப்பன், துணை தாசில்தார் சிவனு பெருமாள், ஆர்ஜ மாரியப்பன், விஏஓ பாலு வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் ஏடி நடராஜன், காய்கனி மார்க்கெட் சங்க தலைவர் செல்வராஜ், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஜேக்கப் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ் ஆர் சுடலைகாசி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..