அலங்காநல்லூரில் பெய்த கன மழைக்கு இடிந்து விழுந்த அரசு மருத்துவமனை சுற்று சுவர்.. விரைந்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

மதுரை, அலங்காநல்லூரில் இரவு பெய்த 1மணி நேர கன மழையில் அரசாங்க மருத்துவமனை சுற்று சுவர் இடிந்து விழுந்தது இச்சுவரை விரைந்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் ஆலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பழைமையான உடை கற்களால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. இடிந்து விழுந்த சுவர் 40 ஆண்டுகள் பழைமையான செம் மண்ணால் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் எந்த ஒரு உயிர் சேதம் இல்லாமல் பெரும் விபத்து தவிற்கப்பட்டுள்ளது. இடிந்து போன சுற்று சுவர் பிரதான நுழைவு வாயில் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இடிந்து போன சுவரை அப்புறப்படுத்தி உடனடியாக தரமான முறையில் கட்டி அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வட்டார மருத்துவர் வளர்மதி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது..

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image