வெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தனிப் பகுதி மலைகளான வே. கள்ளபட்டி மற்றும் புத்தூர் மலையில் வன விலங்குகள் அதிகம் உள்ளன. இங்கு காட்டுப் பன்றிகள் கூட்டமும் கரடிகளும் வறட்சியால் குடிக்க தண்ணீர் இல்லாமல் விலை நிலங்களில் நீர் பாய்ச்சும் நாட்களில் அதிக அளவில் வந்து அடிக்கடி பயிர்களை சேதம் விளைவித்தும் அவைகளை விரட்டும் விவசாயிகள் மீது தாக்குவது தொடர்கதையான விஷயமாகி விட்டது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த சின்னிவீரன் தனது தோட்டத்தில் இரவில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த போது காட்டு பன்றி தாக்கி பலத்த காயமடைந்து ஒரு வாரம் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன் விளைவாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மாலை 6 மணிக்கு மேல் விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்சவோ தோட்டத்தில் தங்கவோ பயந்து வரும் நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மதுரை வேளாண் பல்கலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் மூலம் இந்த இயற்கை சார்ந்த (விஷத் தன்மை அற்ற) விவசாய பயிர்கள் செழித்து வளர்ந்தும் வன விலங்குகள் எவ்வகையிலும் உயிர் இழக்கா வண்ணம் பூச்சி விரட்டிகளை போல வன விலங்குகளை விரட்டும் (hநசடிழடiஎந) எனும் மருந்தை சோதனை முயற்சியாக வெள்ளைமலைப்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள சுமார் 1 ஏக்கர் விலை நிலங்களில் ட்ரோன் கேமரா மூலம் தெளிக்கப்பட்டது.இதற்கு நல்ல பலன் கிடைக்கவே (காட்டுப்பன்றிகள் உள்ளப் எந்த விலங்குகளும் மருந்து தெளித்த இடங்களில் வரவில்லை ) மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் குழு சார்பில் சௌந்திரபாண்டியன் உதவியுடன் சுமாhர் 5 ஏக்கர் பரப்பளவிற்கு ட்ரோன் கேமரா மூலம் மருந்து தெளிக்கப்பட்டது.

இதுபற்றி உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் கூறுகையில் சாதாரணமாக ஸ்பேரயரில் மருந்து தெளிக்கும் போது 10 லிட்டர் வரை செலவாகும்.ட்ரோன் மூலம் தெளிக்கும் போது 3 லிட்டர் மருந்து செலவாகும்.இதனால் மருந்து மிச்சமாகும்.எனவே இதனை 2ம் கட்ட சோதனை முயற்சியாக தற்போது பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..