Home செய்திகள் தேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

தேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

by mohan

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்தில் கம்பம் பழனிசெட்டிபட்டி போடி தேனி நகர் பகுதி பெரியகுளம் நகராட்சியில் ஒரு பகுதி ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதி மட்டுமே கொரோனா கண்டோன்மெண்ட் ஜோன் பகுதிகளாகும். மேலும் தொற்றுள்ள பகுதிகளை மட்டுமே கொரோனா தொற்றின் விதிமுறைப்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படு,அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும்.

ஒரு நகரில் 5வது வார்டு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டால் அந்த வார்டில்இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் மற்ற பகுதிகள் வழக்கம் போல் செயல்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 14 நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும். மேலும் அந்த வார்டில் தொற்றின் தாக்கம் இல்லையெனில் மட்டுமே 14 நாட்கள் பின்னர் தளர்வுகள் தளர்த்தப்படும். பொதுமக்கள் தொற்றின் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளை வாங்க வெளிவரும் பொது மக்கள் கட்டாயமாக பாதுகாப்பான முக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் தொடர்ந்து இருமல் தலைவலி சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். சாதாரண காய்ச்சல் தான் என்று எண்ணிக் கொண்டு நீங்கள் அலட்சியமாக இருந்தால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் தொற்றின் வீரியம் குறைந்தது பூரணம் குணமடைவீர்கள்.

ஆகையால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து, தேனி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறுவதற்கு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் இளங்கோவன் கோவைமாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர் பழனி குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!