நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் 2020 -21 ஆம் ஆண்டுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் அல்தாப் உசேன், மாநில பொதுச்செயலர் ஜாகிர் உசைன், மாநிலச் செயலர் நசீர், மாநில உதவித் தலைவர் பிஸ்மில்லா கான், மஸ்கட் இளம் தொழிலதிபர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சிவசங்கரன் வரவேற்றார்.தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் பேசும்போது, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு வழங்கிய பொறுப்புகளை உணர்ந்து கூட்டுக் குடும்பமாக இருந்து செயல்பட வேண்டும்.

பத்திரிகை தர்மத்தை விருப்பு வெறுப்பின்றி ஜனநாயக முறையில் களப் பணியாற்ற வேண்டும். உறுப்பினர்களின் நலன் காக்க கருத்துப்பரிமாற்றம் மிகவும் அவசியம் என்றார். லடாக் எல்லைப்பகுதியில் நாட்டுக்காக தன் உயிர் நீத்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்கள், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு இரங்கல். தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரானா தொற்று வைரஸ் நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்ற இறைவன் அருள்புரிய வேண்டும். மீண்டும் இயல்பு நிலை திரும்பி பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்களுக்கு பிவிஎம் அறக்கட்டளை தலைவர் ஹாஜி பக்கீர் முகமது, மாநில தலைவர் அல்தாப் உசேன் ஆகியோர் அடையாள அட்டை வழங்கினர்.மாவட்ட பொதுச் செயலர் அஜ்மல், அழகுமலை, மாவட்ட துணை செயலர் பால்ச்சாமி, உதவி ஊடகத் தொடர்பாளர் பாக்யராஜ், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செயலர் அயூப்கான், பரமக்குடி நகர் செயலர் கோபி ராகுல், அலுவலக பணியாளர் கார்த்திக், மணிகண்டன், உட்பட பலர் பங்கேற்றனர். ஊடகத்தொடர்பாளர் கார்த்திக் பாலா நன்றி கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image