நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்த மாநகராட்சி கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார்.அதன் படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை படி பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா பரப்புரையாளர் கனகப்ரியா ஆகியோர் தலைமையில்,திருநெல்வேலி அரசு மருத்துவமனை பகுதியில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றது.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வளாகம் முழுவதும் நவீன இயந்திரம் மூலமாக கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..