Home செய்திகள் அம்மா  சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு

அம்மா  சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு

by mohan

அம்மா  சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோயாளிக்கு வழங்கப்பட்டு வரும் உணவை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு செய்தார் மதுரையில் 4 இடங்களில் கொரோனா  தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது இதனை தொடர்ந்து உணவு தயார் செய்யும் உணவு கூடத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  நேரில் ஆய்வு செய்து அப்போது அங்கிருக்கும் பணியாளரிடம் அறிவுறுத்தியதாவது- தலையில் உறை அணியவேண்டும், கைகளில் கை உறை அணியவேண்டும், தொடர்ந்து அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், உணவு கூடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் அடிக்கடி கிருமிநாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .அதையடுத்து அமைச்சர் ஆர் பி உதயகுமார்  செய்தியாளர்களிடம் கூறியதாவது;

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பிலும், அம்மா சேரிடபிள் ட்ரஸ்ட் சார்பிலும் கடந்த 4ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொரோனா நோய் சிகிச்சை  பெறுபவர்களுக்கும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் புரதச்சத்து நிறைந்த சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி  உணவு வழங்கப்பட்டு வருகிறது இதில் காலை 11 மணிக்கு சூப் மற்றும் பாசிப்பருப்பு ,மாலை 4 மணிக்கு இஞ்சி டீ ,சுண்டல் வழங்கப்படுகிறது.காலையில் வழங்கப்படும் உணவில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம், இட்லி, வடை, முட்டை ,மிளகுப் பால், இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது.மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர்,சப்பாத்தி,பருப்புடால், இரண்டு வகை காய்கறிகள், முட்டை, அப்பளம்,ஊறுகாய் ஆகிய வழங்கப்படுகிறது.இரவு உணவில் இட்லி,தோசை, கிச்சடி, சப்பாத்தி,இரண்டு வகை சட்னி, சாம்பார்,குருமா மற்றும் மிளகு பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது .இன்றைக்கு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பல்வேறு போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறார்.குறிப்பாக மதுரையில் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறார் .இன்றைக்கு எதிர்க்கட்சிகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர் . முதலமைச்சரின் அறிவுரைப்படி மக்களுக்கு  தைரியம்யூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் சுகாதாரச் செயலாளர்  உள்ளிட்டோர்  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்  இதன் மூலம்  மதுரை  மக்கள் அச்சமில்லாமல் அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் .மேலும்  காய்ச்சல் கண்டறியும் குழுக்கள்   வீடு வீடாக கண்காணித்து வருகின்றனர் விரைவில் மதுரை  கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் உருவாகும் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!