மதுரை ரயில் நிலையம் முன்பு பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி காற்றில் கிழிந்து தொங்கியது: கண்டு கொள்ளாத நிர்வாகம்.

மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் பட்டொளி வீசி பறந்த தேசிய கொடி.நேற்று மாலை திடீரென பலத்த காற்று இடி – மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.இந்த பலத்த காற்றில் தேசியக்கொடியானது கிழிந்து சேதமடைந்தது..

மதுரை ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் 9அரை லட்சம் மதிப்பீட்டில் 100 அடி உயரமும் 2 டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் 20 அடி நீளம் கொண்ட பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்ட தேசியக்கொடி கடந்த ஆண்டு குடியரசு தினம் முதல் பறக்கவிடப்பட்டிருந்த நிலையில்,நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக தேசியக்கொடி கிழிந்த நிலையில் சேதமடைந்து கொணப்படுகிறது.இதனை சரி செய்து தேசியக்கொடியை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image