ஆக்கூர் ஊராட்சியில் 2100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார் 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  ஆக்கூர் ஊராட்சியில் 2,100 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. பவுன்ராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் ஆக்கூர் ஊராட்சியில் உள்ள 2,100 குடும்பங்களுக்கு நிவாரணமாக 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி துவக்கிவைத்து, கொரோனா கிருமி நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளி, முகக் கவசங்கள் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை குறித்து கலந்துகொண்ட பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.இதில், கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபாடி.பாண்டியன், ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதா கணபதி, கட்சி நிர்வாகிகள் ரோக்கு.பக்கிரிசாமி, வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ்கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..