பிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…

கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைபடுத்தலுக்கு அச்சப்பட்டு கேரளா முகவரிகளை கொடுத்து கொரோனா பரிசோதனை இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் நுழைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதில் அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், கொரோனா பரவும் அபாயமும் எற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலி ஈ-பஸ் மூலமாகவும், உரிய ஆவணம் இன்றியும் வெளிமாநிலத்தவர்களையும், வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்களையும் சில தனியார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் இருந்து ரூபாய் இரண்டாயிரம் முதல் 20,000 வரை பயண கட்டணமாக பெற்று ஏற்றி வருவதாக அறியப்படுகிறது.

சமீபத்தில் சென்னையில் இருந்து – கேரளாவுக்கு இ-பாஸ் எடுத்துக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மூன்று குடும்பத்தினை சேர்ந்த 8 நபர்களுடன் ராம்ராஜ் – 33 என்பவர் டிராவல்ஸ் வேனில் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிக்கு வந்த போது சம்பந்தப்பட்டவர்கள் ஆலஞ்சி, மேக்காமண்டபம், திக்கணங்கோடு ஆகிய பகுதியை சார்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் டிம்போ டிராவல் வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவரையும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image