சுரண்டையில் எடை அளவைகள் முத்திரையிடும் முகாம்-சமூக விலகலை கடைபிடித்து வியாபாரிகள் பயன்பெற அறிவுறுத்தல்…

சுரண்டை மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் நலன் கருதி சுரண்டையில் எடை அளவைகள் முத்திரை முகாம் ஓவ்வொரு வருடமும் நடந்து வருகிறது.

இந்த வருட முத்திரை முகாம் 08-ஆம் தேதி புதன் கிழமை துவங்கி வரும் 14-08-2020 வெள்ளிக் கிழமை வரை சுரண்டை ஆலடிப்பட்டி வாடியூர் சாலையில், காமராஜர் ஷட்டில் விளையாட்டு அரங்கம் கீழ்புறம்,  உள்ள எஸ்பிஎன் வளாகத்தில் தென்காசி எடை அளவைகள் முத்திரை ஆய்வாளர் சரவண முருகன் தலைமையில் நடக்கிறது.

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அரசு வழிகாட்டுதல் படி தினமும் 30 எடை அளவைகளுக்கு முத்திரை பதிக்கப்படும். இந்த முகாமில் ஏ மற்றும் பி காலாண்டு ( ஜனவரி முதல்  ஜீன் வரை முத்திரை பதிக்க வேண்டிய ) அனைத்து எடை அளவைகளுக்கும் முத்திரை பதித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், முககவசம், அணிந்தும் சானிடைசர் உபயோகப்படுத்தியும், சமுக விலகலை கடைபிடிக்கவும் கொரோனா தடுப்பு விதிகளை செயல்படுத்தி கலந்து கொள்ளுமாறு வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் நடராஜன், பொருளாளர் தனபால் மற்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image