சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது மேலும் ஒரு வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாத புரத்தை சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்: அதில், “தனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளதாகும், மூத்த மகன் துரை இரண்டாவது மகன் மகேந்திரன் மற்றும் மகள் சந்தானம் உள்ளனர். எனது மகன்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் பாப்பான்குளதில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு செல்கிறார்கள். தூத்துக்குடி, தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பலால் கடந்த மே 18 அன்று கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக கொலையான ஜெயக்குமார்யின் தம்பி ஆளிகுமார் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த மே 22 ஆம் தேதி அன்று சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உட்பட சில காவல் துறையினர் எனது மூத்த மகன் துரையை தேடி எனது வீட்டிற்கு வந்தனர், ஜெயக்குமாரின் கொலை சம்பந்தமாக துரை மீது சந்தேகம் உள்ளது என கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேண்டும் என்றனர். ஆனால் சம்பவம் நடந்ததாக கூறிய பைகுளம் , பாப்பான் குளத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.பின்னர் பாப்பான் குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டுக்கு கடந்த 23ம் தேதி அன்று சென்றனர். அப்போது எனது மூத்த மகன் துரை வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த இரண்டாவது மகன் மகேந்திரனை காவல்துறையினர் வீட்டிற்கு வெளியே இழுத்து சென்று, சட்டவிரோதமாக அவரை தாக்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதர்,சார்பு ஆய்வாளர் ராகு கணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை தலை,உடல் முழுவதும் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர் மே 24 ஆம் தேதி அன்று இரவு மகேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, காவல்துறையினர் அவரை மிரட்டும் வகையில், தற்போது காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் எவ்வித புகார் தெரிவிக்க கூடாது என மிரட்டியுள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சில நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஜூன் 13 தேதி அன்று சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.பின்னர் அப்பகுதி மக்கள் ஆதரவுடன் எனது மகன் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பந்தமாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று புகார் அளித்தோம், ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்ட விரோதமாக எனது மகனை காவல் நிலையம் அழைத்து சென்று தலை மற்றும் உடலில் தாக்கிய ஆய்வாளர் ஸ்ரீதர் ,சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மீது சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. எனவே எனது மகன் மகேந்திரன் உயிரிழப்பு சம்பந்தமாக, சட்டவிரோதமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரை தாக்கியது தொடர்பாக விசாரணை செய்ய உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image