Home செய்திகள் பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..

பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..

by mohan

மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் வருகின்ற 12.07.2020 – ம் தேதி வரை பிரிவு 144 Crpc சட்டப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே இந்த ஊரடங்கு உத்தரவை சீரிய முறையில் அமல்படுத்துவதற்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் மதுரை மாநகர காவல் ஆணையர் .பிரேம்ஆனந்த் சின்ஹா பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளார்கள். அதன்படி அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் வெளி இடங்களில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியில் வர வேண்டும் என்றும் அவ்வாறு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மேலும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்களை தாங்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் மட்டுமே நடந்து சென்று வாங்கி செல்லுமாறும், அவ்வாறு இல்லாமல் அத்தியாவசிய பொருடகள் வாங்குவதற்காக வாகனங்களில் நீண்ட துாரம் சென்றாலோ, ஊரடங்கு வீதிமீறல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையினர் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வர் ஊரடங்கு காலம் முடியும் வரை இந்த விதி முறைகள் அனைத்தும் தீவிரமாக அமல்படுத்தப்படும் ..எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றி மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!