பூம்புகார் அருகே 12 படகுகளின் இன்ஜினில் மணலை கொட்டி சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே புதுக்குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த மீனவ கிராமத்தில் இருந்து ஜூலை 4 அன்று மாலை 40 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களது படகுகளைபாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.இதனை அறிந்த மர்ம நபர்கள் மீனவர்கள் நிறுத்திவைத்து சென்ற படகுகளில் உள்ள இன்ஜின்களில் மணலை எடுத்து கொட்டி சென்று உள்ளனர். ஜூலை 8 ஆம் தேதியன்று மீண்டும் கடலுக்கு செல்வதற்காக தங்களது படகுகளை தயார் செய்துள்ளனர்.அப்பொழுது 12 படகுகளில் உள்ள இன்ஜின்களில் மணல் கொட்டி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மீனவர்கள் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் படகுகளில் உள்ள இன்ஜின்களில் மணலை கொட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து புதுக்குப்பம் மீனவர்கள் தெரிவிக்கையில் மர்ம நபர்கள் யாரோ நிறுத்தி வைத்திருந்த படகு என்ஜின்களில் மணலை கொட்டி சென்றுள்ளதாகவும் இதனால் ஒரு வாரத்திற்கு மேல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது எனவும், ஒரு படகை சீர்செய்ய 20 ஆயிரம் செலவாகும் எனவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..