குமரி மாவட்ட பாஜக சார்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி கொட்டும் மழையில் வாழை மரம் நடும் போராட்டம்…

குமரி மாவட்டம் வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை இணைக்கும் சாலையாக உள்ளது.

மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு செல்லும் பொருட்களும் இந்த சாலை வழியாகச் செல்லும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மயிலாடிபுதூர் பகுதியில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

மேலும்,  இந்த சாலையில் பல்வேறு விபத்துக்களும் நடந்துள்ள நிலையில் இதனை சீரமைக்க கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்ட பாஜக சார்பில் சாலையை சீரமைக்கக்கோரி கொட்டும் மழையில் வாழை மரம் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தலைவர் ராஜ பிரபாகரன் தலைமையில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மீனாதேவ் உட்பட பாஜக தொண்டர்களும், ஊர் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image