மதுரையில் விதிமுறை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள்… செய்தி எதிரொலி… காவல் துறையுடன் இணைந்து விதி மீறும் வாகங்களை பறிமுதல் செய்யும் வருவாய்த் துறையினர்…

மதுரையில் கொரானா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு ஜூலை 12ஆம் தேதி வரை முழு ஊரடங்கை மதுரை மாநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பிறப்பித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையல் அதை கண்டு கொள்ளாமலும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் மற்ற கவலைப்படாமல் மக்கள் வாகனங்களில் உலா வந்த வண்ணம் இருந்தனர். இது சம்பந்தமாக செய்தியும் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து மதுரை நகரில்  ஊரடங்கு நேரங்களில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் செல்வோரிடம் மதுரை மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் 20கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இன்று (07/07/2020) ஊரடங்கு உத்தரவை மீறி சென்ற 52 வாகனங்களை மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் பறிமுதல் செய்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பிற மாவட்டங்களிலிருந்து வந்த கார் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை என்று மாணவர்கள் சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்திற்கு காவல்துறையால் எடுத்துச்செல்லப்பட்டது மறு உத்தரவு வந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வாகன உரிமையாளர்களினம் அபராத தொகையை பெற்றபின் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று கீழை நியூஸ் இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .

செய்தியாளர் வி காளமேகம். மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image