மாற்றுத்திறனாளிக்கு கரோனா நிவாரணம் வழங்கி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காப்பலூா் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது.தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா பொது முடக்க நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.அதன்படி, மாவட்டங்களில் வட்ட வாரியாக கரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது.இந்த நிலையில், கலசப்பாக்கம் வட்டம், காப்பலூா் ஊராட்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கி தொடக்கிவைத்தாா்.கலசப்பாக்கம் வட்டத்தில் சுமாா் 3,600 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ப.பொய்யாமொழி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் சங்கரன், வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..