இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் தொடரும் உயிர் பலி… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…….

இராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறிகளால் வருபவர்களுக்கு கூட கொரோனா பரிசோதனை செய்யாமல் அலைகழிப்பு செய்யப்பட்டு உயிர்கள் பழிவாங்கப்பட்டு வரும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல், இருமல் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் சென்ற இராமநாதபுரத்தில் தொழில் புரியும்  கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கு  எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் அவர் மூச்சு விட சிரமப்படுவதையும் கவனித்தில் கொள்ளாமல் அலைகழித்ர காரணத்தால் வேறு மருத்துவமனை செல்ல உதவி செய்யுமாறு கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்களை அணுகியது பெரும் அதிர்ச்சியை தருகிறது.

அதே போல்  கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையை சேர்ந்த பெண் ஒருவர் மூச்சுத்திணறல் காரணத்தினால் அரசு மருத்துவமனையில் காலை வேளையில் அனுமதிக்கப்பட்டு, இரவு வரை எவ்வித சிகிச்சை அளிக்காமலும்,  கரோனா வைரஸ் பரிசோதனை செய்யாமலும் இரவு 12 மணி அளவில் உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் உயிர் பிரிந்த பின்பும் கவனிக்க வேண்டிய விசயங்களை கவனிக்க வற்புறுத்தியது, அவலத்தின் உச்சக்கட்டம். இது சம்பந்தமாக உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..