நிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் 32 பேர்களுக்கு திடீரென கொரானா தொற்று நோயாளிகள் அதிகரித்ததால் இதுகுறித்து நிலக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி திடீரென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் ஆய்வு செய்தார்.அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராமராஜபுரம் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த தெருக்களை ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பொதுமக்களுக்கு தேவையான உரிய சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உரிய வகையில் கிருமிநாசினிகள் தெளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஆனந்தன் நகரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர் பாதிப்பு ஏற்பட்டு வசித்து வந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஊராட்சி மன்றத்தலைவர் களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராமங்கள் தோறும் கிருமி நாசினிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நோய் தொற்றுகளில் இருந்து விலகி இருக்க சமூக விதிகளை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

 நிலக்கோட்டை பஸ் நிலையத்தை கடக்கும் போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஆகியோர்களை அழைத்து நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவு பொதுமக்கள் மாஸ்க் அணியாமலும் அதே சமயத்தில் சமூக விளைவுகள் கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக சர்வசாதாரணமாக சுற்றிதிரிகிறார்கள்.இதனை உடனடியாக காவல்துறையில் கட்டுப்படுத்த முழுமையான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கி மாஸ்க் அணியவும் அதே சமயம் சமூக விளைவுகளை கடைப்பிடிக்கவும் காவல் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து உடனடியாக கொரோனா தொற்று சம்பந்தமான உரிய ஆலோசனை வழங்க தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ் , செல்வராஜ், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி உட்பட பலர் இருந்தனர். திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image