சோழவந்தான் அருகே கோவில் மாடு இறந்தது. கிராம பொதுமக்கள் மரியாதை செய்து அடக்கம் செய்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கோவில் மாடு இருந்தது இதை கிராம மக்கள் பராமரித்து வந்தனர். இந்த கோவில்காளை வயது முதிர்ந்த காரணத்தால் நோய்வாய்ப் பட்டது. கிராமமக்கள் கால்நடை மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் கோவில் மாடு இறந்தது. இந்த கிராம மக்கள் நான்கு தெருக்களிலும் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். பின்னர கிராம பொதுமக்கள் இறந்த கோவில் காளைக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் பொங்கல் மண்டகப்படி மைதானத்தில்  அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கண்ணீர் மல்க மரியாதை செய்தனர். பின்னர் கோவில் காளை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் கட்டுவதாககிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..