மதுரை பைபாஸ் சாலையில் வீட்டில் எலக்ட்ரிக்கல் வயரில் பேனல்கள் திடீர் தீவிபத்து

மதுரை மாவட்டம் பைபாஸ் துரைசாமி நகர் மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில்  இரவு 11 மணி அளவில் எலக்ட்ரிகல் மெயின் பாக்ஸ் பேனலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயானது மளமளவென எரிய ஆரம்பிக்கவும் இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக மதுரை  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். முன்னதாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து அப்பகுதிக்கு வரக்கூடிய மின் இணைப்பை துண்டிக்க துடிக்கச் சொல்லி மின் இணைப்பைப் நிறுத்தினார்கள். துரிதமாக செயல்பட்டதால் தீயானது வீட்டுக்கு பரவாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image