மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,

1.மதுரையில் நாள் ஒன்றுக்கு எடுக்கப்படும் னோ பரிசோதனையின் அளவினை மூவாயிரம் என்று உயர்த்த வேண்டும். இப்பொழுது 1500 மட்டுமே எடுக்கப்படுகிறது. இது எவ்வகையிலும் பொறுத்தமல்ல. உதாரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நாளொன்றுக்கு சுமார் 300 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்று வைத்துக்கொண்டாலும் 1200 பேர் தொற்று பாதித்தவரின் குடும்பத்தினர், தொற்றுக்கு ஆட்பட்டவர்களின் தொடர்பாளர்கள் என்று மூன்று பேர் வீதம் கணக்கு வைத்தாலும் அது 900 பேர் ஆகிறது. அதாவது முதல் நாள் 300 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் சார்ந்தவர்களே 2100 பேர் ஆகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு 1500 சோதனை மட்டுமே செய்வது, எவ்வகையிலும் பொறுத்தமல்ல. எனவே நாள்தோறும் 3000 சோதனை செய்யப்பட வேண்டும்.

2. மதுரை அரசு மருத்துவமனையில் 1300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால் இதில் சரிபாதி அளவே தயார் நிலையில் உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே தாங்கள் தலையிட்டு உடனடியாக படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுகிறேன்.

3. இப்பொழுது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் 32 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றை நாள்தோறும் 50 என்ற எண்ணிக்கையில் அதிகப்படுத்த வேண்டும். அதே போல புறநகர் பகுதியிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

4. மதுரையில் தொற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளது, இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்நிலையில் கரோனோவுக்கு எதிரான போராட்டத்தில் மாவட்ட, மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தையும், அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. அந்தவகையில் மாநில அரசினை நாங்கள் தொடர்ந்து வழியுறுத்தியதால் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார், அதே போல இரு தினங்களுக்கு முன்பு மாநகராட்சி சுகாதார அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவெல்லாம் கோவிட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கை என்பதில் ஐயமேதுமில்லை. ஆனால் இப்பொழுது மதுரையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ துறை சார்ந்த அதிகாரியை சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சி நடப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளோம்.

கரோனோ தொற்று பரவல் கடும் ஆபத்தினை சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியான நேரத்தில் மாநில அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து மதுரையை மேலும் துயரத்துக்குட்படுத்த வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறேன்.  .மதுரை பாராளமன்ற உறுப்பினர். சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்,

செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image