விவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த வாரங்களில் வரத்து அதிகமாக வந்ததாலும் மழையின் இடையூறு காரணத்தாலும் நல்ல விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்த நிலையில், நாகை விற்பனை குழு செயலாளர் கோ.வித்யா அறிவுருத்தலின் பேரில் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சுமார் 2000 குவிண்டால் பருத்தியும், கலைமகள் கலை கல்லூரியில் சுமார் 1500 குவிண்டால் பருத்தியும், சுமார் 750 விவசாயிகள் எடுத்து வந்து பயன் பெற்றனர்.இந்த மறைமுக ஏலம் விற்பனை கூட மேற்பார்வையாளர் பி.மா.பாபு முண்ணிலையில் இந்திய பருத்தி கழகத்தின் அதிகாரிகள் ரமேஷ், ஆனந்தன், குட்டிகுமார், இளங்கோவன் கலந்து கொண்டு சுமார் 2000 குவிண்டால் பருத்தியை அதிகபட்ச விலை ரூ 5550க்கும் குறைந்த பட்ச விலை 5278-க்கும் கொள்முதல் செய்தனர்.

மேலும், தஞ்சை மாவட்ட வியபாரிகள் திருமாறன், தினகரன், நாகை வியபாரிகள் செந்தில் வேலன், கலியமூர்த்தி, விழுப்புரம் வியபாரி பழனி, சந்திரன் போன்றோர்கள் கலந்து கொண்டு அதிகபட்ச விலை 4182-க்கும் குறைந்த பட்ச விலை 3400-க்கும் கொள்முதல் செய்தனர்.
இரண்டு இடங்களில் ஏலம் நடை பெற்றதாலும் நல்ல விலை கிடைத்ததாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நாகை விற்பனை குழு செயலாளர் கோ.வித்தியா, தரங்கம்பாடி வட்டாச்சியர் சித்ரா மற்றும் வருவாய் ஆய்வாளர் ஏலம் நடைபெற்ற இடங்களில் ஆய்வு செய்து ஏலம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image