சிவகாசி நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரானா தொற்று உறுதி… காவல்நிலையம் மூடல்..

சிவகாசி நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெருமளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கும் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு சிவகாசி நகர் காவல் போலீசார் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து நேற்று அதே காவல் நிலைய ஆய்வாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிவகாசி நகர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறிப்பாக சிவகாசி பகுதியில் கொரானா வைரஸ்னால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image