உசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில் பட்டி புதுக்கோட்டை வெள்ளைமலைப்பட்டி தாதம்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் நூற்றுக்;கணக்கான ஏக்கரில் விவசாயிகள் இரும்புச்சோளம் என்றழைக்கப்படும் சிவப்புச் சோளத்தை பயிரிட்டுள்ளனர்.தற்போது கோடை மழை பெய்ததால் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சலைக் கண்டுள்ளது.மேலும் உசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் ஒரு குவிண்டால் ரூ 6ஆயிரம் முதல் ரூ 8ஆயிரம் விலை போகின்றது. இதனால் இதனை பயிரிட்ட விவசாயிகள் நல்ல விலை போவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொதுவாக கடந்த வருடம் சிவப்புச் சோளம் குவிண்டால் ரூ3 ஆயிரம் வரை மட்டுமே விலை போனதாகவும் ஆனால்; இந்த வருடம் ரூ 8ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.இச்சோளத்தில் புரதச்சத்து மாவுச்சத்து நிறைந்துள்ளளதால் சத்தான உணவாகக் கருதப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதால் தற்போதைய கொரோனா தொற்று காலகட்டத்தில் பொதுமக்கள் இச்சோளத்தை அதிகளவில் வாங்குவதால் நல்ல விலை போவதாக வியாபாரிகள் தெரிவித்தனனர்.கொரோனா தொற்றினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விவசாயப்பணிகள் நடைபெறாததால் கையில் மிச்சமிருக்கும் பணத்தையும் சிவப்பு சோளத்தை நம்பி பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..