வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ஸ்டேட் வங்கி ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு நிதி

இந்திய-சீன எல்லையில் கிழக்க லடாக் பகுதியில், இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கா.பழனி வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பழனி உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். பழனி குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். அவரது உடல் முப்படைகள் அணி வகுப்பு ராணு மரியாதையுடன் கடுக்கலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்டேட் வங்கி சார்பாக மத்திய, மாநில அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவரவர் பதவிக்கேற்ப விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி சம்பளக் கணக்கு படி விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சத்திற்கான காசோலையை மனைவி வானதிதேவியிடம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று (06.7.2020) வழங்கினார். ராமநாதபுரம் ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் இ.சங்கர்ராஜன் உடனிருந்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..