Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..

மதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..

by ஆசிரியர்

மதுரை தோப்பூரில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,000த்தை தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட 28 கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 3,000 படுக்கை வசதிகள் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் டெல்லியை போன்று திறந்த வெளிஇடங்களில் பிரமாண்ட கூடாரங்கள் அமைத்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதிகள் போன்ற அனைத்து வித வசதிகள் கொண்ட அதிநவீன சிகிச்சை அளிப்பதற்கு நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் 400 X 300 சதுர அடி பரப்பளவில் 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக கூடாரம் அமைப்பதற்கும், அதற்கு அருகாமையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை, குளியறை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் திட்டமதிப்பீடு அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் என பொதுப்பணித்துறை மருத்துவ கட்டமைப்பு செயற்பொறியாளர்ருக்கு  உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து தற்காலிக திறந்தவெளி கூடாரம் அமைவிடத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர், கொரோனா சிறப்பு கணிப்பாய்வு அலுவலர் சந்திரபோஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக முன்னாள் முதல்வர் காலத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பின்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஜூலை 3ஆம் தேதி இந்திய அரசு அரசாணையில் மதுரை எய்ம்ஸ் பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏய்ம்ஸ் மருத்துவமனைக்காக 224 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டு இருந்தாலும் தற்போது வருவாய்த்துறை மூலமாக வேகமாக வேலை நடைபெற்று வருகிறது. ஜப்பானிய நிறுவனமான JIICA நிறுவனத்திடமிருந்து நிதி பெறப்பட்டு ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையப் பெற்றாலும் தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய மைல்கல்.

கொரோனா நோய் தொற்றினால் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்படும் நிதியில் தாமதம் ஏற்படுமா என்ற கேள்விக்கு’

தொடர்ந்து joint secretary சுனில் சர்மா அவர்கள் தான் மையப்புள்ளி அவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஏய்ம்ஸ் மருத்துவமனைகாக தனியாக இயக்குனர் போடப்பட்டு மத்திய அரசு குழு நியமித்து இதற்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது.

ஜூலை 31ம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். நாங்களும் முதல்வர் ஆணைக்கிணங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம்.

ஏய்ம்ஸ் மருத்துவமனை வேலைகள் வேகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!