வங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..

சமீப காலமாக டிஜிட்டல் மயம் என்ற பெயரில் வங்கி பரிவர்த்தனை மொபைல், ஈமெயில் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.  இதன் காரணமாக வங்கிகளிடம் இருந்து தினமும் பல ஈமெயில் மற்றும் அழைப்பு வங்கிகளிடம் இருந்து வந்த வண்ணம் இருப்பதை காண முடியும்.  சில ஈமெயில்களுக்கு நாம் அளிக்கும் பதிலையே ஒப்புதலாக ஏற்று நிரந்தர வைப்பு தொகையாக வங்கியால் மாற்ற முடியும்.

இந்நிலையில் கீழக்கரையிலும் இது போல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.  இது போன்ற சம்பவங்கள் அதிக நாட்கள் வங்கி கணக்கில் வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களை குறி வைத்து நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த சுல்தான் என்பவர் கூறுகையில் சதக் கல்லூரி அருகே உள்ள வங்கி ஒன்றில் NRI கணக்கு வைத்துள்ளேன். அத்தியாவசிய தேவைக்கு என வைத்திருந்த எனது பணத்தில் ரூ-85000/த்தை கேள்விப்படாத ஒரு இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு மாற்றி விட்டதாக குறுந்தகவல் வந்தது. அதை தொடர்ந்து வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்ததில் பணம் எடுக்க இன்னும் 5வருடங்கள் ஆகும் என கூறியதால் இராமநாதபுரம் மெயின் வங்கிக்குச் சென்று என் சம்மதமின்றி வங்கி பரிவர்த்தனை நடந்துள்ளது பற்றி புகார் அளித்தேன்.

இன்னும் 15தினங்களில் திருப்பி தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.  இதேபோல் கீழக்கரையில்ல் உள்ள சில வங்கிகள்,  நெடுநாட்களாக இருப்பு உள்ள வாடிக்கையாளரிடம் ₹ 55 ஆயிரத்தை இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு மாற்றினால் பணம் இரட்டிப்பாகும் என கூறி ஒப்புதல் வாங்கியுள்ளனர்.

இது வேலையில் பதவி உயர்வு பெருவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு வார்த்தை ஜாலத்தால் பல சலுகைகள் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெரிய தொகையை டெபாசிடாக பெற்றவுடன் பதவி உயர்வு பெற்று வாடிக்கையாளர்களிடம் சொல்லாமலே இடத்தை காலி செய்து விடுகிறார்கள்.

கீழக்கரை மக்களே கவனம்….

தகவல்: மக்கள் டீம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..