செங்கம் அருகே நாய் துரத்தியதில் விவசாயக் கிணற்றில் விழுந்த புள்ளி மான் – பத்திரமாக மீட்ட மீட்புத்துறையினர்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சுற்றி, ஏராளமான காடுகளில் அரிய வகை மான், மயில் போன்ற வன விலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன.வனப் பகுதிகளில் வன அலுவலர்கள் போதுமான குடிநீர் குட்டைகளை அமைக்காததால், அடிக்கடி வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஊருக்குள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.ஊருக்குள் வருகின்ற வனவிலங்குகளை நாய்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் துரத்துவதால், அடிக்கடி உயிரிழக்கும் சம்பவமும் நடைபெறுகிறது.இந்நிலையில் இக்கிராமப்பகுதிக்கு வந்த புள்ளி மானை நாய் துரத்தியதால் கிணற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.மாவட்ட வனத்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வண்ணம் வனப்பகுதிகளில், வனவிலங்குகளுக்காக குடிநீர் குட்டைகள் அமைத்து வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்,

புனித ரமலான் வாழ்த்துக்கள்..