ஊராட்சி மன்றங்களுக்கு 3மாதநிலுவையில் உள்ள மாநில நிதிக்குழு மானியத்தை வழங்கவேண்டும். தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்புக்கூட்டம் ஆண்டிபட்டி இந்திராநகர் சேவைமையகட்டிடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சகுபர்சாதிக் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்றதலைவர்கள் பாண்டுரெங்கன்  ஆகியோர் முன்னிலை
வகித்தனர். செயலாளர் பவுன்முருகன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் இரும்பாடி ஈஸ்வரிபண்ணைசெல்வம், முள்ளிப்பள்ளம் பழனிவேல், ரிஷபம் சிறுமணி, குட்லாடம்பட்டி கதிரவன், காடுபட்டி ஆனந்தன், நாச்சிகுளம் சுகுமாறன்,குருவித்துறை நம்பிராஜன், கருப்பட்டி அம்;பிகா, திருவேடகம் பழனியம்மாள், நெடுங்குளம் சுப்பிரமணியன், ராமயன்பட்டி குருமூர்த்தி,ஆண்டிபட்டி மீனாள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தகூட்டத்தில் ஊரட்சிமன்றங்களுக்கு 3மாதம்நிலுவையில் உள்ள மாநிலநிதிக்குழுமானியத்தைஉடனேவழங்ககோரியும்,ஊராட்சிகணக்குஎண்மாற்றங்களுக்கு கணினி காலதாமதத்தை தவிர்க எழுத்துமூலம் மாற்றகோரியும், வறுமைக்கோடு  பயனாளிபட்டியல் மற்றும்பிரதமர்வீடு திட்டபயணாளிகளை தேர்வு செய்ய பஞ்சாயத்து தலைவர்களுக்குஅனுமதி வழங்ககோரியும், தேசியஊரகவேலை திட்டத்திற்கும்,ஊராட்சிமன்றதலைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்ககோரியும், டெண்டர் மற்றும்பணிநியமன ஆணைகளை வழங்கும் அதிகாரத்தை ஊராட்சிமன்றதலைவருக்கு வழங்ககோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர்
கே.எம்.பாண்டுரெங்கன் நன்றிகூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image