மனிதநேயம் வீழ்கிறதா??.. மீள்கிறதா??.. இரண்டு நாட்களாக கவனிப்பாரற்று சாலையில் கிடந்த மனிதர்… உதவிய சமூக ஆர்வலர்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் மேம்பாலம் கீழே,  மாடக்குளம் செல்லும் சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடும் மூச்சுத் திணறலுடன் இரண்டு நாட்களாக கவனிப்பாரற்று இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று (05/07/2020) காலை இதைப்பற்றி அப்பகுதி மக்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து  அப்பகுதியை சேர்ந்த கீழை நியூஸ் மதுரை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் காளமேகத்தை  தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கான முயற்சிகளை  மேற்கொண்டனர்.

இதையறிந்து காளமேகம் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்த பொழுது  காவல்துறையிடம் தகவல் சொல்லுங்கள் என கூறி எந்த விபரமும் கூறாமல் இணைப்பை துண்டித்து உள்ளார்கள், ஆனால்  உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியாளருக்கு நேரடியாக தொலைபேசி மூலமாக நடந்த விவரங்களை தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சில நிமிடத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் 3 பேர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தத்தை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து வந்த 108 வாகனம் ஓட்டுனர்களும் பிரசவத்திற்கு மற்றும் மற்ற நோயாளிகளை ஏற்றக்கூடிய வாகனம் என மறுப்பு தெரிவித்து விட்டு திரும்பி சென்று விட்டனர்.

பின்னர் மீண்டும் மாநகராட்சி ஆட்சியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தவுடன் உடனடியாக கோவிட் 108 ஆம்புலன்ஸ் காளவாசலில் இருந்து இரண்டு மணி நேரம் கழித்து வந்தத பின் பாதிக்கப்பட்டவரின் நிலையை அறிந்து  கருப்பையா என்ற தூய்மைப் பணியாளர், பாதிக்கப்பட்டவரை தூய்மைப்படுத்தி, புதிய ஆடைகளை அணிவித்து 108 வாகனம் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால். 8:30 முப்பது மணி முதல் 12 மணி வரை பாதிக்கப்பட்டவரை  மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளார்கள். பொது பணியில் இருப்பவர்கள் சிரமத்துக்கு ஆளானும், பல நேரங்களில் அவர்கள் காட்டும் அலட்சியத்தால் தான் நோய்த்தொற்று அதிகம் பரவ ஆரம்பிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  இதுபோன்ற அலட்சியம் காட்டாமல் துரிதமாக அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டால் நோய் தொற்று அதிகம் குறையும் என்பதே நிதர்சனம். இப்பணிக்கு முழு ஒத்துழைப்பும், துரித நடவடிக்கையும் எடுத்த ஆட்சியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் தூய்மை பணியாளர் ஆகியோர் பாராட்டதக்கவர்கள்.

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..