கொரோனாவிலிருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம்-பிரமிக்க வைக்கும் வீடியோ…

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து பாதுகாக்க ரூ.3 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ஆன முகக்கவசம் அணிந்து கொண்டு வலம் வரும் நகை பிரியர் ஒருவரின் செயல் அனைவரையும் பிரமிக்க செய்துள்ளது.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் குராடே. இவர் தங்க முக கவசம் ஒன்றை அணிந்து கொண்டு வலம் வருகிறார். இதன் மதிப்பு ரூ.2.89 லட்சம் ஆகும். தங்க நகைகளை அணிவதில் ஆர்வமுள்ள இவர் தனது அனைத்து விரல்களிலும், மோதிரங்கள் அணிந்துள்ளார்.

மேலும், தங்க பிரேஸ் லெட்டுகள் மற்றும் பெரிய தங்க சங்கிலிகளையும் அணிந்துள்ளார். முக கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ள நிலையில், அதனையும் தங்கத்திலேயே செய்து அணிந்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, கோல்ஹாபூரில் ஒருவர் வெள்ளி முக கவசம் அணிந்திருந்த வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் கவனித்தேன். அதனால், தங்க முக கவசம் அணியும் எண்ணம் எனக்குள் உதித்தது.

இதன் காரணமாகவே ஐந்தரை பவுண்டு எடை கொண்ட இந்த தங்க முக கவசத்தை அணிகிறேன். இதில் சிறிய துளைகள் உள்ளன.  அதனால் சுவாசிப்பதற்கு எந்த சங்கடமும் இல்லை.

இந்த தங்க முக கவசம் அணிவதனால் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வருமா? அல்லது வராதா? என்பது பற்றி எனக்கு தெரியாது.  ஆனால் அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றினால், கொரோனா வைரஸ் பரவலை தடுத்து விடலாம் என கூறியுள்ளார். இவரின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..