விவசாயி மகன் கண்டுபிடித்த முதல் கொரோனா தடுப்பு மருந்து-தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் கிருஷ்ணா எல்லா…

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை (கோவாக்சின்) கண்டுபிடித்து பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ணா எல்லா தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கோவாக்சின்’ (COVAXIN) என்ற அந்த மருந்துக்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்தியாவின் மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அதை மனிதர்கள் மீது பரிசோதித்துப் பார்க்க அனுமதித்துள்ளது.

உலகின் மிகவும் விலை குறைந்த `ஹெபடைடிஸ்’ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த, உலகில் முதன்முறையாக `ஸிகா’ வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழக விவசாயி மகனின் நிறுவனம் தான் இப்போது கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா.தமிழகத்தை சேர்ந்த இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பட்டப்படிப்பை முடித்ததும் விவசாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தவர்.

பின்னர், குடுமப பொருளாதார சூழல் காரணமாக ‘பேயர்’ எனும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் விவாசாயத் பிரிவில்  பணியமர்த்தப்பட்டார்.  அப்போது, ரோட்டரி  ‘Freedom From Hunger’ எனும் உதவித்தொகை கிடைக்க, அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவர், ஹைதராபாத் நகரில் தன்னிடம் உள்ள மருத்துவ சாதனங்கள் கொண்டு  ஒரு சிறிய ஆய்வகத்தை தொடங்கினார். இது தான் பிந்தைய நாளில் ‘ பாரத் பயோடெக்’ எனும் நிறுவனமாக மாறியது.

இவரது பாரத் பயோடெக்’ நிறுவனம் உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனம் எனும் சாதனையை படைத்துள்ளது. மேலும், பயோடெக் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..