அரசு விழாவா? ஆளும்கட்சி விழாவா? திமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள புள்ளிமான் கோம்பை ஊராட்சியில் தர்மத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டப் பட்டு நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதனையடுத்து அதிமுக ஒன்றிய செயலாளரும் ஆண்டிபட்டி ஒன்றிய குழு தலைவருமான லோகிராஜன் குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகளை வழங்கினார். ஆனால் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் இந்த அரசு விழாவைப் புறக்கணித்து விட்டு தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினார்.இதுகுறித்து திமுக எம்எல்ஏ கூறுகையில்,

தருமத்துப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு எனக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்து விட்டு. ஆளும் கட்சியினர் சாலையின் இருபுறத்திலும் கொடிகளை கட்டி பேனர்களை வைத்துள்ளனர். ஒரு அரசு விழாவில் ஆளும் கட்சியினர் இவ்வாறு நடந்துகொண்டால் மற்ற கட்சியினர் எப்படி அரசு விழாவில் கலந்து கொள்வார்கள் என்பது ஆளும் கட்சியினருக்கு தெரியாதா? இல்லையெனில் அரசு அதிகாரி களுக்கு தெரியாதா? பின்னர் ஏன்? எனக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். இவ்விழா அரசு விழாவா? இல்லை. ஆளும் கட்சி விழாவா? என்ற புகாரை மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட நேர்முக உதவியாளரிடம் வழங்கியதாக தெரிவித்தார்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image