கொரோனா தொற்றால் சாத்தனூர் அணை மூடல் ! தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் இழப்பு.

சாத்தனூர் அணை 100 நாட்களுக்கு மேல் மூடப் பட்டிருப்பதால் சுமார் ரூ. 10 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தகவல்.உலகையே மிரட்டும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக அமலில் உள்ளது. இதையொட்டி சுற்றுலா தலங்கள், கோயில்கள், சினிமா தியேட்டர், ஆகியவற்றில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு தடை விதித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை மூடப்பட்டு 100 நாட்களை கடந்த நிலையில் அணையை சுற்றி பூங்கா, நீச்சல் குளம், படகு ,மீன் காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, போன்றவை அமைக்கப்பட்டு இருந்தும் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வராததால் களை இழந்துள்ளது. சுற்றுலா அணையை சுற்றி பார்க்க சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மதுரை, கடலூர் திருச்சி ,சேலம், போன்ற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். தற்போது கரோனா வைரஸ் எதிரொலியாக சாத்தனூர் அணை மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அணையை நம்பி கடை நடத்தி வரும் சிறு வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கரோனா வைரஸ் தாக்கத்தால் சாத்தனூர் அணை 100 நாட்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளது இதனால் சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் மாதத்திற்கு 3 லட்சம் வீதம் 100 நாட்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..