இராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை..

இராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் தேவையான இடங்களை விட அதிகமாக கையகப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் பாலம் அமைப்பதற்கு இடம் கையகப்படுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு தற்போது இடம் கையகப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நில உரிமையாளர்களிடம் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கலசுப்பிரமணி, மற்றும் இராஜபாளையம் வட்டாட்சியர் ரமணன் ஆகியோர் மனுக்களை பெற்று நில உரிமையாளர்களிடம் அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டனர்.

இதில் நில உரிமையாளர்கள் பாலம் அமைப்பதற்கு தேவையான இடங்களை விட அதிகமாக இடங்களை கையகப்படுத்துவது எங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகளை இழந்து வாடுவதாக வருவாய் அலுவலரிடம் முறையிட்டனர் முறையான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image