வர்த்தக சங்க பிரநிதிகளுடன் அமைச்சர் ஆய்வு

மதுரை மாவட்டம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பாக வர்த்தக சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு, அரசு செயலர் பி. சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் , வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்பேசும்போது தெரிவிக்கையில்:

மதுரை மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தன்மையை புரிந்துகொள்ளவேண்டும். முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க மிதமான அறிகுறி தொற்று ஏற்பட்டவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இருக்கும் பட்சத்தில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு டெலிமெடிசன் மருத்துவர்கள் அவர்களுக்கு போதுமான அறிவுரைகள் வழங்கி நோயாளியை குணப்படுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாத நபர்களுக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேளாண்மைக் கல்லூரி போன்ற கல்லூரிகளில் கோவிட் கேர் சென்டர் நிறுவப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. தீவிரமாக நோய் பாதிப்பு இருப்பின் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று வேலையும் சத்தான உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக குணமாகி வருகின்றனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவை தொடர்ந்து ஊரடங்கு காலங்களில் இரண்டாவது முறையாக நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.1000ஃ- நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.மேலும் ,நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.

தன்னார்வலர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் தாராளமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கண்டிப்பாக மாவட்ட நிர்வாகம் வரவேற்கும். பல்வேறு தன்னார்வலர்கள் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் தானியங்கி கை சுத்திபரிபான் இயங்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கணிப்பாய்வு அலுவலர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலன்சீர்மரபினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர்பேசும்போது தெரிவிக்கையில்:

மதுரை மாவட்டத்தில் இதுவரை 3133 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிதமான பாதிப்பில் உள்ளவர்கள்; மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதில்லை. இவர்களுக்கு போதுமான வசதிகள் இருப்பின் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு டெலிமெடிசன் மருத்துவக்குழு உதவியுடன் அவர்கள் வழங்கும் மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை பெற்று கொள்வதன் மூலம் 14 நாள்களில் குணமாகி விடுவர்.தொழில் நிறுவனம் மற்றும் கடைகளில் பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பாக வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். காய்ச்சல் இருப்பின் அவர்களை பணியில் அமர்த்துதல் கூடாது. பணியாளர்கள் சோப்பு மூலம் அடிக்கடி கை கழுவுவதற்கான வசதிகளை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். கிருமி நாசினி கொண்டு அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்கள் மருத்துவர்களின் ஒருங்கிணைப்புடன் கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றிகொண்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும்.
தன்னார்வலர்கள்ää தொண்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் ஆகியோர் தங்களால் முடிந்த அளவு பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி கை சுத்திகரிப்பான் வழங்கவேண்டும். கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த வெண்டிலேட்டர் வசதி அதிகமாக தேவைப்படுவதில்லை. மாறாக பல்ஸ் ஆக்சிலேட்டர் மற்றும் டிஜிட்டல் தர்மா மீட்டர் இதுபோன்ற மருத்துவ உபகரணங்கள் வழங்க முன்வரவேண்டும். மேலும் தங்கள் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனையோடும் கோவிட் கேர் சென்டர் நிறுவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும். தன்னார்வலர்கள் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்தார்.இந்த ஆலோனைக் கூட்டத்தில்,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்,மதுரை மாநகராட்சி ஆணையாளர் .எஸ்.விசாகன்,மாவட்ட வருவாய் அலுவலர் .பி.செல்வராஜ்,துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.பிரியா ராஜ்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜசேகரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் .இராமலிங்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தொழில் வர்த்தக சங்கம், மடீசியா உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள் நலசங்கம் பெட்ரோல்,
டீசல் விற்பானையாளர்கள் நலசங்கம் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image