எம்எல்ஏ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் பவுன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் எம்எல்ஏ விடம் கூறியதாவது;

இந்த, ஆரம்ப சுகாதார நிலையம் மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, மாமாக்குடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் 100 க்கும் குறையாமல் நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.இந்த ஆரம்ப சுகாதார நிலையமானது, மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கட்டிட மேற்கூரை பெயர்ந்து, சுவர்கள் விரிசல்கள் ஏற்பட்டு அபாயகரமான நிலையில் இருந்த நிலையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் இடம் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.அதனடிப்படையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு ஊராட்சி மன்ற தலைவரிடமும் மக்கள் முன்னிலையிலும் இதற்கான புதிய கட்டிடங்கள் விரைவிலேயே அமைத்து தரப்படும் என்றும், மேலும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதால் விரைவிலேயே மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமித்து பூர்த்தி செய்யப்படும் என பூம்புகார் எம்எல்ஏ எஸ் பவுன்ராஜ் உறுதியளித்தார்.இந்த ஆய்வின் போது அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்வம், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிமன்ற தலைவர் தேவி சுரேஷ்குமார், கீழையூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபடி பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இரா.யோகுதாஸ், செய்தியாளர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..