மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய அரசின் கீழ் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைத்திட பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுஷாதி மருந்து கடை திறக்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு நகர பாஐ தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். மருந்தக உரிமையாளர்கள் சேர்மன், ஜவஹர் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பாஐ நிர்வாகிகள் துணை தலைவர் மாரியப்பன், பொது செயலாளர் தீபம் செந்தில் குமார், செயலாளர் ராயல் ராமசாமி, பொருளாளர் சுந்தர் குமார், மண்டல் பிரபாரி முருகேசன், மாவட்ட விவசாய அணி வல்லப கணேசன், முன்னாள் ஓன்றிய தலைவர் சிவனனைந்த பெருமாள், எஸ்சி எஸ்டி மாவட்ட பொது செயலாளர் ராமர், பதஞ்சலி ரமேஷ், இராமன் அழகுசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் ஜவஹர் தங்கம் நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image