இராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின் கொரோனா உறுதி செய்ய பட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பார்வதி (வயது 45) என்ற பெண் உடல் நிலை சரியில்லாத நிலையில் கடந்த 26ம் தேதி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் அங்கு மருத்துவர்கள் சாதரன காய்ச்சல் என கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டு சென்ற பார்வதிக்கு மூச்சு தினறல் அதிகமாக ஏற்பட்டதை அடுத்து மீண்டும் மருத்துவமணைக்கு சென்றுள்னர். அங்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுத்த பின் கிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் 30.6.2020 உயிரிழத்துள்ளார்.

மேலும் கொரோனா பரிசோதனை செய்து அறிக்கை வருவதற்கு முன் கடந்த 30ம் தேதி இறந்தவரை உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர்க்கு 03.07.2020 தொற்று உறுதி என முடிவு வந்ததால் இறுதிசடங்கில் பங்கேற்றவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image