ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக தண்டோரா..

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினால் அனைத்து கடைகளும் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பழையகால வழக்கப்படி தண்டோரா போட்டு அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்க நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதே போல் இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பால் மற்றும் மருந்துக்கடை தவிர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், தற்காலிக காய்கறிசந்தை, ராமகிருஷ்ணாபுரம், மேலரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பழையகால வழக்கப்படி தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே சுற்றினாலும்,சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image