செங்கம் அருகே 4175 கோழிக்குஞ்சுகள் 177 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வள்ளியூர் 167 பயனாளிகளுக்கு 4125 கோழிக்குஞ்சுகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார். கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 கோழிக்குஞ்சுகள் அடங்கிய அட்டைப் பெட்டிகளை வாழியூர் படவேடு பஞ்சாயத்துகளை சார்ந்த பெண்கள் பெற்றுக்கொண்டனர் .மண்டல இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குனர் ராமன், கால்நடை டாக்டர்கள் வாழியூர் கருணாநிதி, படவேடு பெரியசாமி ஆய்வாளர் சின்னாண்டி உதவியாளர்கள் கோடிஸ்வரி, சிவா, படவேடு பஞ்சாயத்து தலைவர் சீனிவாசன், வாழியூர் தலைவர் கீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசுப் கட்டடம் குப்பம் ஊராட்சியில் பொதுப்பணித் துறை சாா்பில், அங்குள்ள அரசுப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 32 லட்சத்து 47ஆயிரத்தில் 2 தளம் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. பணிகளை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நளினி மனோகரன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னாள் யூனியன் கவுன்சிலர் சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..